
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
பதிகங்கள்

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.
English Meaning:
Nandi Grants Unending GraceNandi the great, Nandi the famed,
Nandi that barred the way of my future birth;
He gave me the ambrosial bliss that never cloys;
He the Lord of a thousand names;
In one word He said, ``Bathe eternally
In the unending sea of Grace. ``
Tamil Meaning:
`நந்தி` என்னும் பெயரை உடைய சிவன், இனிப் பிறந்து உலகின்கண் வாராது என்றும் ஒருபடித்தாய் இருத்தற்குரிய வழியை எனக்குத் தந்தமையால் பெரியரிற் பெரியன் ஆகின்றான்; அந்நிலையில் அதுவெறும் வறுநிலையாய் இல்லாது உண்ண உண்ணத் தெவிட்டாத இனிக்கின்ற இன்பத்தை வழங்கினமையால் அவன் ஆனந்தமயன் ஆகின்றன். அவன் தனது அளவில்லாத பெருமை காரணமாக அளவற்ற பெயர்களை உடையன். அவற்றுள் எந்தப் பெயரையேனும் சொல்லி அதன் பொருளை உணரும் முகத்தால் அவனது திருவருளால் விளைகின் மேற்கூறிய இன்பக்கடலில் எஞ்ஞான்றும் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள்செய்தான்.Special Remark:
`நந்தி` என்னும் பெயரை உடையவனை `நந்தி` என்னும் பெயராகக் கூறியது ஆகுபெயர். அதனைப் பின்னும் கூறியது சொற் பொருட் பின்வருநிலை. `தந்தான்; அதனால் மாநந்தி` எனக் கூறற்பால வற்றை இவ்வாறு கூறியது உடம்பொடு புணர்த்தல். ``பேர் நந்தி`` என்னும் எழுவாய்கட்கு, ``மாநந்தி ஆனந்தி`` என்பன பயனிலையாயின.``ஆயிரம்`` என்பது அளவின்மை குறித்தது. எல்லாப் பெயரும் அவனது திருவருளின் பெருமையையே உணர்த்தலின் `எந்தப் பெயரினாலும் அருட்கடலில் ஆடலாம்` என்றார். அப் பெயர்கள் சிவன், சங்கரன், சம்பு, மயற்கரன், மயோபு, உருத்திரன் முதலியன. அவற்றது பொருள்களை அறிந்துகொள்க. ``பேர் ஒன்று`` என்பது, தலைமை பற்றி, சிவன் - என்பதையே குறித்தது எனவும் உரைப்பர்.
இதனால், `திருவருள் இருளாய்த் துன்பத்தைத் தருவதாகாது ஒளியாய், இருளை நீக்கி எல்லையில் இன்பத்தை வழங்குவதே` என்பது தெளிவிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage