ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
    அத்தனை மாயா அமரர் பிரானைச்
    சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
    பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.
  • 10. நிலைபெற கேடென்று முன்னே படைத்த
    தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
    மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
    உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே.
  • 2. அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு)
    அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன்
    அடியார் அருளால் அவனடி கூட்ட
    `அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.
  • 3. நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
    ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர்
    பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன்
    ஊரில் உமாபதி யாகிநின் றானே.
  • 4. ஒத்துல கேழும் அறியா ஒருவன்என்
    றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப்
    பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது
    முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.
  • 5. ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல
    நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
    வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
    ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.
  • 6. பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
    முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
    அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால்
    பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.
  • 7. பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக்
    குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி
    நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
    இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.
  • 8. உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
    பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
    செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து)
    உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.
  • 9. வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
    தானவர் முப்புரம் சென்ற தலைவனை
    கானவன் என்றும் கருவரை யான்என்றும்
    ஊனத னுள்நினைந் தொன்று படாரே.