
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
பதிகங்கள்

பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக்
குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.
English Meaning:
Reach God the Kundalini Yoga WayWith Prana breath for Seed-Energy,
And the serpent (Kundalini) for body,
To the resounding music of Nada,
Upward I climb to the cool mountain within;
And with fragrant flower there blooms,
I adore Nandi;
None else the God to adore,
My mind I let.
Tamil Meaning:
உபநிடதம் கூறுமாறு ஐந்து பறவைகள் போன்றுள்ள ஐந்து உடம்புகளுள்ளும் உள்ளீடாய் நிற்கின்ற ஆன்மாவும், அன்ன மயம், பிராணமயம் என்னும் உடம்பினுள் பாம்பு வடிவாய் உள்ள குண்ட லினியும் பொதுமை நீங்கி, உண்மை நிலையை அடைந்திருக்க, அவ் வுடம்புகளுள்ளே மலையில் வாழும் குறவர்கள் இசைக்கும் இசைபோல எழுகின்ற நாதங்கள் ஒலிக்க, அமிர்தத்தால் குளிர்ந்திருக்கின்ற, விந்துத் தானமாகிய, `மேரு` எனப்படும் ஆஞ்ஞையை அடைந்து அங்குக் கொல் -லாமை முதலிய எட்டையும் எட்டு மலர்களாகக் கொண்டு வழிபட்டுத் `தியானம்` செய்யும்பொழுது, எங்கள் சிவபெருமானையன்றி, எனது மனம் வேறொருவனை `இறைவன்` என்று கொண்டு தியானியாது.Special Remark:
தைத்திரீய உபநிடதம் ஆனந்த வல்லியில், ஐங்கோசங் -களையும் தனித்தனிப் பறவையாகவும் அவற்றின் உறுப்புக்களைத் தனித்தனி ஐந்தாக வைத்து, முகம் முதலிய உறுப்புக்களாகவும் உருவகம் செய்து கூறிற்று. அதனை, மாதவச் சிவஞான யோகிகள்,``ஆன்மா இத் தரை கீழ் மேலும்
கொள்ளி வட்டம் கறங்கென
நிமிடத்தின்கண் அலமரும் படி
கொண்டு திரிதல் பற்றி இவ்
வைங்கோசங்களை ஐந்து
பறவையாகவும், அவற்றுள் ஒரோ
ஒன்றை ஐவகைப் படுத்து முகம்
முதலிய உறுப்புக்களாகவும்
வேதத்துள் உருவகஞ் செய்
துணர்த்தியவாறு``
முண்டகோபநிடதம், மூன்றாம் முண்டகத்தில், ஆன்மாவையே பறவையாக உருவகம் செய்து, `அஃது உலகமாகிய மரத்தில் அமர்ந்து, அதில் உள்ள போகமாகிய பழத்தைப் புசிகின்றது` என்றும், `ஆயினும், அதனைவிட்டுப் பிரியாது இணைந்து உடன் இருக்கின்ற மற்றொரு பறவை அந்தப் பழத்தை உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றது` என்றும் கூறிற்று. உண்ணாமல் பார்த்துக்கொண்டிருக்கின்ற பறவை சிவன்.
பறவை உடம்பை எடுத்த உயிரும் `பறவை` என்றே சொல்லப் படுதல் பற்றி முண்டகோபநிடதம் ஆன்மாவையே (பறவை) என்றது. ஆயினும் உண்மையில் பறவையாவது, பறவை உடம்பே ஆகையால், தைத்திரியோபநிடதம் ஐவகை உடம்புகளையே ஐந்து பறவைகளாகக் கூறிற்று. இங்கு நாயனார், ``பறவை`` என்றது உடம்பையே. கர்ப்பம் - சூல்; உள்ளீடு உடம்பின் உள்ளீடாவது ஆன்மா. குறவர் பாடும் இசையை, ``குறவம்`` என்றார். ஆஞ்ஞையை `மேரு` என்பதால், அதன் கீழ் ஒலிக்கின்ற நாதத்தை, ``குறவம்`` என்றார். சிலம்புதல் - ஒலித்தல். இதனை, மேல், ``மணி கடல் யானை``l என்னும் மந்திரத்தும் குறித்தவாறு காண்க. கொல்லாமை முதலிய எட்டாவன, `கொல்லாமை, ஐம்பொறியடக்கல் பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` என்பன. 9 இவை எண்வகை யோக உறுப்புக்களில் இயம நியமங்களாய் வருதல் காண்க. ஏத்துதல், இங்குப் பொதுமையில் `வழிபடுதல்` என்னும் பொருட்டாய்த் தியானத்தைக் குறித்தது, குளிர் வரை ஏறியபின் செயற்பாலது அதுவேயாகலின்.
இதனால், சிவ பத்தியே இறை பத்தியாவதன்றிப் பிற பத்திகள் இறை பத்தியாகாமை வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage