
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
பதிகங்கள்

ஒத்துல கேழும் அறியா ஒருவன்என்
றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப்
பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.
English Meaning:
Where is That Peerless Pearl?Well may denizens of seven worlds, all,
Entire try,
They cannot know Him;
Who can say where Lord is?
Unless He of Himself appears
In devotion of His devotees,
Who dares say,
Where that peerless Pearl is!
Tamil Meaning:
அன்பரது அன்பில் சென்றாலல்லது, `அனைத் துலகங்களாலும் அறிய இயலாத ஒருவன்` எனச்சொல்லப்படுகின்ற சிவன் இருக்கின்ற இடத்தை அறிந்து சென்றடைய வல்லார் யாவர்? அவ்வாறே, அன்பர்கள் தம் அன்பிற்கண்டு சொன்னாலல்லது, கிடைத்தற்கரிய முத்துப்போன்ற அவனைக் கண்டு சொல்ல முற்படுவார் யாவர்? ஒருவரும் இல்லை.Special Remark:
சிவனை அவன் அன்பர்களல்லது பிறர் காணவும், சொல்லவும் வல்லாரல்லர்` என்றபடி.``சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க``3
என்றருளிச் செய்தமை யறிக. `ஒருவன்` என்பது சிவனைக் குறிக்கும் ஒருபெயர்.
``ஒருவன் என்னும் ஒருவன் காண்க``9
``ஒருவன் என்று உலகம் ஏத்தும்
நளிர்மதிச் சடையன்``8
எனத் திருவாய்மொழியுள்ளும் வந்தது. `என்ற, இருந்த` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. `ஆரறிவார் சொல்ல` என்பது பாட மன்று; அது பின்னர் வருதல் காண்க. ``பததர்தம் பத்தியின் பாற்படி னல்லது`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்தது. அங்ஙனம் இயையுங்கால் ``தம்`` என்பது முன்னர்ச் சாரியையாயும், பின்னர்ப் பெயராயும் நின்றது.
இதனால், `பத்தி யுடையாரே சிவனைக் காணவும், சொல்லவும் வல்லார்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage