
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
பதிகங்கள்

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர்
பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.
English Meaning:
Lord is Righteous and BounteousCooler than water is He;
Hotter than fire is He;
Who this Ocean of Nandi is—
Who knows?
By far righteous is He;
Than all bounteous beings in world;
Within the heart He stood,
As Umapati (Sakti`s Lord) He stood.
Tamil Meaning:
சிவன் குளிர்ச்சியால் இருக்க வேண்டிய சமையத்தில் நீரைவிடக் குளிர்ச்சியாய் இருப்பான். சுடவேண்டிய சமையத்தில் நெருப்பை விடச் சூடாகச் சுடுவான். (இரண்டும் கருணையே). அவனது முறை இவ்வாறாதலை அறிய வல்லார் ஆர்! நிலவுலகில் உள்ளார்க்குப் புலனாகாமலே சூக்குமமாய் இருந்து, அவர்கட்குப் பயன் தருகின்ற தேவர் பலரையும்விடச் சிவன் அதிசூக்குமன் ஆயினும், அவன் உயிர்களின் பொருட்டு ஊர்கள் தோறும் உமாதேவிக்குக் கணவனாய், அவளோடும் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றான்.Special Remark:
`அஃதறிந்து அவ்விடங்களில் சென்று பத்தி செய்க` என்பது குறிப்பெச்சம். ``நந்தி`` என்பதை முதலிற்கொள்க. இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``பயன்`` என்பதன்பின் `தரும்` என ஒருசொல் வருவிக்க. நேர்மை - சூக்குமம். இது பருமைக்கு எதிரானது. உமாபதியாகி நிற்றல், `உலகனைத்திற்கும் அம்மையும், அப்பனும் தானே` என்பது தோன்றுதற்கு, `அதனை யுணரின் பத்தி தானே பெருகும்` என்பது கருத்து.இதனால், சிவன் உருப்பத்தி சிவ பத்தியேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage