
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
பதிகங்கள்

முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரானைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.
English Meaning:
He is Lord of AllHe confers Mukti;
He is Jnana and Mantra;
He is the Father;
He is the Lord of Celestials immortal;
He is the Pure One;
He is the Light that is the Holy Way;
He is the Pasu-Pati
Whom the devotees in ardour adore.
Tamil Meaning:
வீடுபேற்றைத் தருகின்ற ஞான நூலைக் கற்கின்ற கல்வியின் பயனாயும், அவற்றைப் பற்றிக் கேட்கின்ற கேள்வியின் பயனாயும் உள்ளவனும், உலகிற்குத் தந்தையும் தேவர்கட்குத் தேவனும், தான் இயல்பாகவே தூயனாய், உயிர்கள் தூய்மை அடைதற்குரிய வழியாய் நிற்பவனும், அறிவே வடிவாய் உள்ளவனும் ஆகிய சிவனையே, `உயிர்கட்குத் தலைவன்` என்று உணர்ந்து இறையன் புடையோன் போற்றுவான்.Special Remark:
``பத்தன்`` என்பது சாதி யொருமை. பாசப்படுதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலாகக் கூறப்பட்டது. ``ஞானமும் கேள்வியும்`` என்றது ஆகுபெயராய், அவற்றின் பயனைக் குறித்தது.இதனால், `இறையன்பாவது இது` என உணர்ந்தார் பத்திசெய்யும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage