
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
- எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
- எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
- எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
- எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்
- எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
- எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
- எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
- எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
- எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்
- எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
- எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
- எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
- எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
- எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
- எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
- எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
- எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
- எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
- எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
- எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
- எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
- எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
- எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
- எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
- எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
- எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
- எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
- எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
- எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
- எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
- எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
- எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
- எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
- எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்
- எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
- எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
- எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
- எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
- எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
- எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 43. சோதனை
Paadal
-
1. வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.
-
2. மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.
-
3. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
-
4. அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.
-
5. உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து)
உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.
-
6. நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.
-
7. உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம்
பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.
-
8. `அவன் இவன் ஈசன்` என்(று) அன்புற நாடிச்
`சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார்
பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப்
புவன் இவன் போவது பொய்கண்ட போதே.
-
9. கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே.