
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
பதிகங்கள்

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.
English Meaning:
Conquer DesiresNo use prattling of
Breath and Sushumna;
Sunder your desires and passions;
Having sundered,
The Lord`s place, easy be.
Tamil Meaning:
வாசி யோகத்தின் பெருமையையும், அதிற் பயிலும் யோகியின் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, ஞானிகளும் விரித் துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிரல் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும் உயிர்ப் பொருள்கள்மேல் செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீவிர் இறை நிலையை அடைதல் எளிதாகும்.Special Remark:
`இல்லையேல், அரிதாகும்` என்பதாம். மூசுதல் - மூடுதல். மூசி - மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள். பேசி - பேசுபவன். வீண் காலம் போக்குதலை, `பிதற்றுதல் என்றார். அன்பு இல்லறத்தார்க்கே உயிரனவாய் நீங்க, ஞானிகட்கு அருளே உரித்தாதல் பற்றி, அன்பும் அறுக்கப்படவேண்டியதாயிற்று. ``இடம்`` என்றது நிலையை, இதனால், `சொல்லளவாய் நிற்கும் அவா அறுத்தல் ஞானி கட்கும் பயன் தருவதாகாது` என்பது கூறப்பட்டது. ``எனபோல் உடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுவர் ஆர்`` எனத் தாயுமான அடிகளும் கூறினார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage