
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
பதிகங்கள்

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
English Meaning:
Sunder DesiresSunder your desires, sunder your desires
Sunder your desires even like Lord;
The more the desires, the more your sorrows;
The more you give up, the more your bliss shall be.
Tamil Meaning:
மேற்கூறிய உலக ஆசைகள் அனைத்தையும் நீவிர் கட்டாயமாக அறவே விட்டொழியுங்கள்; அவைகளை விட்டு நீவிர் சிவனை அடைந்தபின்பும் பழைய பழக்கத்தால் அந்த ஆசைகள் மீண்டும் உங்கள்பால் தோன்றுதல் கூடும். அப்பொழுதும் அதனை முளையிலேயே அறுத்தெறியுங்கள்; ஏனெனில் ஆசை மிகுந்து மிகுந்து வருவதால்தான் எந்நிலையிலும் துன்பங்கள் மிகுந்து மிகுந்து வருகின்றன. ஆசையை நீக்க நீக்க, இன்பங்களே மிகுந்து மிகுந்து வரும்.Special Remark:
அடுக்கு, வயியுறுத்தற்பொருட்டு, `ஈசனிடத்தாயினும்` என ஏழனுருபுபுணர்ப்பினும் அமையுமாயினும் அவ்வாறு புணர்த்தோதாது, ``ஈசனோடாயினும்`` என மூன்றுனுருபு புணர்த் தோதியதனையும் நோக்காது, `ஈசனை விரும்புதலையும் விடுமின்` என உரைப்பாரும் உளர். அந்த விருப்பத்தையும் அறுத்தவர் அடைவது யாது? மீமாஞ்சகரும், தருக்க மதத்தவரும், பாடணவாத சைவரும் கூறும், யாதோர் உணர்வுமின்றிக் கல்லுப்போலக் கிடக்கும் நிலையேபோலும்! ஈசனிடத்திருந்தபொழுதும் உலக ஆசை துன்பந்தருதற்கு நம்பியாரூரர் வரலாறு நற்சான்று பகரும். பின்னிரண்டடிகளில் வந்த ஆக்கம் மிகுதி மேலன.இதனால், அவா துன்பத்திற்கும், அவா இன்மை இன்பத்திற்கும் காரணம் ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage