
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
பதிகங்கள்

உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து)
உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.
English Meaning:
Perish not in the Flood of Pleasure and PainLike the ocean that foams and rages
At full-moon tide,
Many, many, floods rose and passed away
Through passage of Time;
Caught in floods of pleasure and pain,
Celestials numberless perished;
Caught in the floods of desires
The humans countless sank;
God alone forever stood
In the Ocean of Bliss Eternal.
Tamil Meaning:
நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடலைப்போல ஊழிவெள்ளம் தோன்றி உலகை விழுங்கிவிட்டு மறைந்தது. என்றும் கெடாத இன்பக்கடலை இறைவன் தாங்கிக் கொண்டிருக்கின்றான். ஆயினும், வானோரும், மண்ணோரும் ஆசைக்கடலில் மூழ்கியிருந் தமையால் இறைவனது இன்பக்கடலை அடைய மாட்டாது, அந்த ஊழி வெள்ளத்தில் மூழ்கி அழிந்தனரேயன்றி பயன் ஏதும் பெற்றாரில்லை.Special Remark:
ஈற்றடியை முதலடியின் பின்னர்க்கூட்டி, வானோர், மண்ணோர் அவாக் கடலும் பட்டு அழுந்தினராய், உவாக் கடலுட் பட்டு துஞ்சினர்` என முடிக்க. பின் வந்த ``உவாக்கடல்``, `மேற்கூறிய அந்தக் கடல்` என்னும் பொருட்டாய் நின்றது. ஏனைப் பிறப்புக்கள் பலவற்றினும் சிறந்த பிறப்பினராகிய தேவரும், மக்களும்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே தேவரும், மக்களுங்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே ஆயினர்` என்றபடி. ``அழுந்தினர்`` என்பது முற்றெச்சமாய் நின்றது. அவாக்கடலைத் துன்பக் கடலாக வருணித்தமையால், ``தவாக்கடல்`` என்றது இன்பக் கடலாயிற்று.இதனால், மக்கள், தேவர் பிறப்பினையும் ஆசை பயனில்லன ஆக்குதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage