
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
பதிகங்கள்

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.
English Meaning:
Jnani`s Purified WayEmancipated from Karmas of past,
Rid of disease of Pasa,
Prolonged activity suspended;
They, the Suddha State reach;
Then transcending the five acts of God
His direct Grace, they receive
There they forever immersed are
These, Jnanis, purified ways are.
Tamil Meaning:
ஞானிகளாயினார் செய்யும் வீட்டு நெறிச் செயலாவன, (தீக்கையால் எரிக்கப்பட்டு ஒழிந்த சஞ்சித வினைபோக, முகந்து கொண்டு) எஞ்சி நின்ற பிராரத்த வினைத் தாக்கத்தையும், கருவி கரணங்களால் நிற்கும் மாயையின் தாக்கத்தையும் வாசனை யளவாய் நிற்கும் ஆணவத்தின் தாக்கத்தையும் முன்போல நீடியாது (சிவஞானபோதப் பன்னிரண்டாம் சூத்திரத்திற் கூறிய முறையால்) உடனே தடுத்துப் போக்கித் தூய்மையோடிருத்தலும், ஐந்தொழில் முதல்வர் செய்யும் ஐந்தொழிலின்றும் நீங்கிச் சிவனது திருவருளைப் பெற்று அவற்றால் அவனை நேரே கூடி அவனது இன்பத்தில் மூழ்குதலுமேயாகும்.Special Remark:
`பின்னும் பின்னும் ஆசையில் வீழ்ந்து அழிவதன்று` என்பதாம்.``தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்``*
என்றருளினார் திருவள்ளுவர். பிணி - கட்டு; நோயுமாம். வினையை முன்னர்ப் பிரித்தமையால் பிணி ஏனையவாயின. `பின்றை` என்பதன் ஈற்று ஐகாரமும் அதன்பின் உம்மையும் தொகுத்தலாயின. ``பின்றை`` என்பது, `மற்று` என்னும் பொருளதாயிற்று. பேர்த்தல் - நீக்குதல் அருள்பெற்று, நேர்த்துன்றி` என இயைக்க. அழுந்துதலுக்கு இடம் ஆற்றலால் பெறப்பட்டது. தூய்மை - வீடு. இஃது அதற்குரிய செயல்களைக் குறித்தது.
இதனால், `ஆசை அற்றொழிதற் பொருட்டு ஞானிகள் செய்யும் செயல்கள் இவை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage