ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
    நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன்
    பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன்
    பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.
  • 2. நவமாம் அவத்தை நனவாதி பற்றின்
    பவமாம் மலம் குணம் பற்றற்றுப் பற்றாத்
    தவமான சத்திய ஞானப் பொதுவில்
    துவம் ஆர் துரியம் சொரூபம் தாமே.
  • 3. சிவமான சிந்தையில் சீவன் சிதையப்
    பவமான மும்மலம் பாறிப் பறிய
    நவமான அந்தத்தின் நற்சிவ போதம்
    தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.
  • 4. முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
    தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள
    பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
    தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.
  • 5. உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
    பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
    அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும்
    இகந்தன வல்வினை ஈடறுத் தானே.
  • 6. நலம்பல காலம் தொகுத்தன நீளம்
    குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும்
    பலம்பல பன்னிரு காலம் நினையும்
    நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.
  • 7. ஆதி பராபரம் ஆகும் பராபரை
    சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம்
    ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி
    நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.
  • 8. தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
    வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி
    ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
    வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.
  • 9. ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
    நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி
    ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
    செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.