
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
பதிகங்கள்

தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன்
பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன்
பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.
English Meaning:
Souls in the Three Mukti StatesVisvan, Dhaisathan and Prajnan
They are in Tvampada State;
Virattan, Hiranya Garbhan, Avyakritan
They are in Tat-Pada State;
Idayan, Prjapathyan and Santan of Golden World
They are in Asi-Pada State
Yet are they all but Abhimanis,
Souls that are aspirants still.
Tamil Meaning:
வியாத்தன், தைசதன், பிராஞ்ஞன், விராட்டன், இரணிய கருப்பன், அவ்வியாகிருதன் இதயன், பிரசாபதி, சாந்தன் இம்முத்திறத்து ஒன்பது பெயர்களும் சீவ சாக்கிரம் முதலிய முத்திறத்து ஒன்பது அவத்தைகளிலும் சிவன் தான் காட்சிப்படும் முறையால் எய்தும் பெயர்களாம். ஆகவே, அவனை அத்தன்மையனாகக் காணும் காட்சியில் சீவனும் சார்ந்ததன் வண்ணமாம் தன் றன்மையால் அப்பெயர்களைப்பெற்று நிற்கும்.Special Remark:
விசுவன் - உலகுயில் வடிவினன். தைசதன் - (தேசசு) ஒளி வடிவினன். பிராஞ்ஞன் - பெருஞான வடிவினன். இம்மூன்று பெயர்களும் முறையே பிராணாயாம பிரத்தியாகாரங்களாகிய சீவ சாக்கிரத்திலும் ஆன்ம தரிசன சிவரூபங்களாகிய சிவ சாக்கிரத்திலும், சீவன் முத்தி அதிகார முத்திகளாகிய பரசாக்கிரத்திலும் எய்துவனவாம்.விராட்டன் - விராட் புருடன்; சகல புவன வடிவினன். இரணிய கருப்பன் - பொன்வண்ணத்தன்; கவர்ச்சி தருபவன். அவ்வியாகிருதன் - பிரிவுபடாதவன்; அருவுருவன். இம்மூன்று பெயர்களும் முறையே தாரணையாகிய சீவ சொப்பனத்திலும், ஆன்ம சுத்தி சிவ தரிசனங்களாகிய சிவ சொப்பனத்திலும், இலய முத்தியாகிய பர சொப்பனத்திலும் எய்துவனவாம்.
இதயன் - இருதயத்தில் ஒளிர்கின்றவன்; பிரசாபதி - உயிர்களைப் பாதுகாப்பவன். இங்கு ஆகாமியம் நிகழாவாறு தடுத்துப் பிறப்பில் வீழாதபடி காத்தல் என்க. சீவனும் இவ்வாற்றால் தன்னைத் தற்காப்பதாகும். சாந்தன் - அமைதியுடையவன். பிறபொருள் அனைத்திலும் பற்றின்றியிருத்தலோடு ஒன்றன் வாசனையேனும் இல்லாது இன்ப வடிவாய் இருப்பவன். இம்மூன்று பெயர்களும் முறையே தியான சமாதிகளாகிய சீவ சுழுத்தியிலும், சிவயோக சிவபோகங்களாகிய சிவ சுழுத்தியிலும், இலய முத்தி பர முத்திகளாகிய பர சுழுத்தியிலும் எய்துவனவாம். `பர சுழுத்தியில் காட்சிப்படுபவன் சொரூப சிவனாகிய பரம சிவனே` என்பது `சாந்தன்` என்னும் பெயரால் அறியப்படுவது. மாண்டூக்கியோப நிடதத்து ஏழாவது மந்திரம், ``சிவம், சாந்தம், அத்வைதம், சதுர்த்தம்`` எனக் கூறி மற்றும் பலவாறாக வருணித்தது சொரூப சிவத்தையேயாம்.
சதுர்த்தம் - நான்காவது பொருள். அஃதாவது, `துரிய மூர்த்தி` என்பதாம். இங்குத் துரிய துரியாதீதங்களும், `சுழுத்தி` என அடக்கப்பட்டமையால் மூன்றாவது மூர்த்தியாகச் சொல்லப்பட்டது. `சிவன் நான்காமவன்` என்பதனால், அவன் மூம்மூர்த்திகளுள் ஒருவன் ஆகாமை விளங்கும்.
மற்றும் அவ்வுபநிடதத்து நான்காம் மந்திரம் `தைசசன்` என்பது சொப்பனாவத்தையில் எய்தும் பெயராகக் கூறிய சொப்பனத்தைச் சீவ சாக்கிரத்தை நோக்கச் சிவ சாக்கிரம் சொப்பனம் போலத் தோன்றுதல் பற்றிக் கூறியதாகக் கொள்ளல் வேண்டும்.
விசுவ ரூபியை முண்டகோபநிடதம் `அந்தரான்மாவிற்கு அக்கினி தலை, சந்திர சூரியர் கண்கள், திக்குகள் காது, வேதங்கள் வாக்கு, வாயு மூச்சு, புவனங்கள் இருதயம்` என வருணித்து, `அவனது பாதங்களிலிருந்தே அனைத்துலகங்களும் `உண்டாயின` என்றது.3
``நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகமும் முகிழ்த்தன முறையே``
என்பது ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து.
`தொல் பதம்` என்பது எதுகை நோக்கி, `தொற் பதம்` எனத் திரிந்தது. இஃது உயிர்கட்கு அநாதியாய் உள்ள பசுத்துவத்தை ஒட்டி நிகழும் அவத்தையைக் குறித்தது. பதம் - அவத்தை. ``நற்பதம்`` என்பது நின்மலாவத்தையையும், ``பிற்பதம்`` என்பது அவற்றின்பின் நிகழும் பராவத்தையும் குறித்தன.
``அபிமானி`` என்பதைச் சாதியொருமைப் பெயராகக் கொண்டு சிவன், சீவன் இருவரையுங் கொள்க.
இவ்வதிகாரத்து இம்முதல்மந்திரத்தால் நவாவத்தை அபிமானிகள் எய்தும் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage