
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
பதிகங்கள்

நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும்
பலம்பல பன்னிரு காலம் நினையும்
நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.
English Meaning:
Many Paths to GodMany the paths they laid
In Time`s Corridor long;
Many the sects
That sought Him to reach;
Think of Him constant, day and night;
He diverse stood in lands many.
Tamil Meaning:
சிவன் உயிர்களுக்கான நல்லவழிகள் பலவற்றைச் சொல்லியருளிய காலம் எல்லையறியப்படாத பழமையுடையது. (`படைப்புக் காலம்` என்றபடி) உயிர்த் தொகுதிகள் அவ்வழிகள் பலவற்றில் தம் கருத்திற்கு ஏற்புடையவற்றைப் பற்றி அவற்றிற்கு ஏற்ற பயன்களை அடைந்து வருகின்றன. பெரும் பொழுது ஆறும், சிறு பொழுது ஆறுமாகிய பன்னிரண்டு காலங்களிலும் சிவபெருமானை நினைவதால் விளையும் பயன்களும் பல அங்ஙனம் நினைத்தற்குரிய இடங்களும் பல என்றாலும் ஆறு இடங்களில் (ஆறு ஆதாரங்களில்) சிவன் இனிது விளங்குபவனாய் இருக்கின்றான்.Special Remark:
`அந்த ஆறு இடங்களில் அவனை நினைக்கப் பழகுங்கள்` என்பது குறிப்பெச்சம்.`தான் நலம் பல தொகுத்தன காலம் நீளம்` எனவும், பன்னிரு காலம் நினையும் பலம் பல` எனவும் மாறிக் கூட்டுக. நினைத்தற்குச் செயப்படுபொருளும், ``தான்`` எனப்பட்ட சிவனே என்பது எளிதின் விளங்கும். சிறுபொழுது ஆறும் பெரும்பொழுது ஆறின் வேறாவன அல்ல எனினும் `எஞ்ஞான்றும் ஒழியாது நினைக` என்றற்கு அவற்றை வேறுபோல வைத்து ``பன்னிரு காலம்`` என்பதை வினைத்தொகை யாக்கி, `சொல்லப்படும் காலை, மாலை இருகாலமும்` எனவும் உரைப்பர்.
இதனால், `வீடு பெற விரும்புவோர், ஒன்பான் அவத்தைகளில் சீவ அவத்தைகளாகிய யோகாவத்தையை முதற்கண் பற்றுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage