
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
பதிகங்கள்

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.
English Meaning:
Goal of Siddhanta PhilosophyIn the nine states of experience
Jiva as aspirant (abhimani) stands;
The nine categories afterward stated
That to the Primal Lord belong;
When Jiva that stands in states nine
Reaches the Turiya States Three,
Then shall he Siva become;
This the goal of Siddhanta (Philosophy).
Tamil Meaning:
இங்குக் கூறிவரும் ஒன்பான் அவத்தைகளிலும் சிவன் அபிமானியாய் நிற்கும் நிலைகள், அவ் அவத்தைகளில் செயற்படும் தத்துவங்கள், மற்றும் சில இவற்றை உணர்ந்து அவ்வொன்பான் அவத்தைகளிலும் `துரியம்` எனப்படும் நிலையிலே நிற்றற்கண் பர துரியத்தில் சீவன் செம்மைச் சிவனாகிவிடுவதே சித்தாந்த நெறியின் முடிநிலைப் பயனாகும்.Special Remark:
எனவே, `பிற பிற சமயத்தார் கூறும் சித்திகள் எல்லாம் முடிநிலைச் சித்திகள் அல்ல` என்பதாம். நவாவத்தைகளில் செயற் படும் நவதத்துவங்களான, சீவ அவத்தையில் பிராணனை இயக்கும் அகங்காரம், தியானிக்கப்படும் பொருளை ஒருதலையாக உணரும் புத்தி, அதனையே சிந்திக்கும் சித்தம் என்பனவும், சிவ அவத்தையுள் குருமொழியைச் சிந்திக்கும் ஞானம், அடையப்படும் பொருளைத் தெளியும் ஞானம், தெளியப்பட்ட பொருளையே விரும்பி அதன்கண் அழுந்தும் ஞானம், என்பனவும், பராவத்தையில் சிவனது நேர் அதிகார சத்தி, போக சத்தி, இலயசத்தி என்பனவுமாம். இங்குப் பராசத்தியும் வேற்றுமை மிக இன்மையால் இலய சத்தியாகக் கொள்ளப்பட்டது. செம்பால் - செம்மைப்பகுதி. என்றது சொரூப நிலையை. எனவே, `சொரூப சிவம்` என்பதை நாயனார், `செம்பாற் சிவம்` எனக் குறித்திருத்தல் குறிக்கொளத் தக்கது. செம்மை - உண்மை நிலையில் வேறுபடாது இருந்தவாறே இருத்தல். சித்தி - பேறு. என்றது, சிறப்புப் பற்றி முடிநிலைப் பேற்றையே குறித்தது.இதனால் நவாவத்தைகளின் முடிநிலைப்பயனும் அதனை அடையுமாறும் கூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage