
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
பதிகங்கள்

சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானனந் தத்தே
துவமார் துரியம் சொரூபம தாமே.
English Meaning:
Svarupa (Manifestness) is in the Fourth Turiya StateJiva having become Siva
And the triple Malas extinguished;
Ascending into the Triple Voids
In Desire and Not-desire ceased
Pass into the holy state of
Satya-Jnana-Ananda Bliss;
There in that farthest Turiya of Jiva,
The Self-illuminating Manifestness (Svarupa) is.
Tamil Meaning:
பயன் இலதாம் பிறவியிற் செலுத்துகின்ற மும்மலங்களும் நீங்கி உயிர் சிவமாதற்பொருட்டு உண்மையான மூன்று துரிய நிலைகளைப்பிற பற்றுக்கள் நீங்குதற் பொருட்டுப் பற்றினால், தவத்தின் பயனான சத்திய ஞானானந்தம் கிடைக்கும். அந்நிலையில் அந்த ஆனந்தத்தையுடைய பொருளும் காட்சிப்படும்.Special Remark:
``சிவமாம் மும்மலந்தீர`` என்பதனைப் பின்முன்னாக நிறுத்தி, `மும்மலந்தீர்ந்து சிவமாக` விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. பவம் - உண்மை. துரியம், `பாழ்` எனப்பட்டது. `துரிய நிலையில் ஆனந்தம் தோன்ற, அதனானே அதனையுடைய பொருள் உண்மை தோன்றும்` என்றபடி. சொரூபம், `வந்து` (பொருள்) எனவும் பொருள் தரும். ஆனந்தம் தோன்ற, அஃதே பற்றி அதனையுடைய பொருளை உணர்தல், அருணோதயம் உண்டாக, அஃதே பற்றி ஞாயிற்றை உணர்தல் போலும்.இதனால், துரியத்தை எய்தி, அதில் ஞானானந்தத்தை உணர்ந்து, அதனானே பொருளை உணர்க` என்பது கூறப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage