
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
பதிகங்கள்

சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
English Meaning:
Sakti is Sat, Para Jnana is Chit and Siva is AnandaTo speak of Sakti, Siva and Parajnana-Bliss
Thus are they;
Infinite high is Siva`s Bliss (Ananda)
Manifestness (Svarupa) is Sakti (Sat);
Parajnana is that the Holy Guru to Jiva imparts (Chit);
—All three together are like the Flower
Blended with Six attributes above (Sat-Chit-Ananda).
Tamil Meaning:
சத்தி, சிவம் இவற்றது இயல்பைச் சொல்லுமிடத்து முறையே பர ஞானமும், அதனால் தரப்படுகின்ற முடிவில் பொருளும் ஆகும். இனிச் சிவம் பிறிதொன்றிலும் இல்லாத, தனி ஒரு பேரானந்தப் பொருளுமாம். அந்தச் சிவத்தின் மேனிலைச் சத்தியே பக்குவான் மாக்களை ஆட்கொள்ளுதற்கு இந்நிலவுலகில் வந்து உலாவச் செய்கின்ற குரு வடிவும் ஆகும். இங்குக் கூறிய பரஞானம், முடிவின்மை, ஆனந்தம், ஆன்மாக்களை ஏற்ற பெற்றியால் ஆட்கொள்ளும் பேரருள் என்பனவற்றுக்கு முன் மந்திரத்திற்கூறிய குவளை மலரே உவமையாம்.Special Remark:
``சாற்றுங்கால்`` என்பதனை, ``சிவம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உய்த்தல் - தரப்படுதல். ``அனந்தம்`` என்பதிலும் எண்ணும்மை விரித்து, எஞ்சிநின்ற `ஆம்` என்னும் பயனிலையை வருவிக்க. அனந்தம் - முடிவின்மை. முடிவு காலம். இடம் இரண்டு பற்றியது. காலம் பற்றிய முடிவின்மை` நித்தியத்துவத்தையும், இடம் பற்றிய முடிவின்மை பூரணத்துவத்தையும் விளக்கும். நித்தியத்துவமே மெய்ம்மையும், பூரணத்துவமே பெருநிறைவும் ஆகும். மெய்ப் பொருள் `மெய்யாயும், அறிவாயும், முடிவிலதாயும் உள்ளது` என்பதை தைத்திரீய உபநிடதம், ``சத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம``8 எனக் கூறிற்று. சத்தி தன்னிலையில் நிற்குங்கால் `சொரூப சத்தி` என்றும், பிறவற்றோடு தொடர்புற்று நிற்குங்கால் `தடத்த சத்தி` என்றும் சொல்லப்படும். `அவற்றுள் சொரூப சத்தியே அருளுருவாய் வந்து ஆட்கொள்ளும்` என்பது பின் இரண்டடிகளில் கூறப்பட்டது. முன் மந்திரத்திற்கூறிய உற்பல உவமையை, `பூவண்ணம், பூவின் நிறம் போல மெய்ப்போத இன்ப மாவண்ண மெய்கொண்டவன்``3 என்னும் பரஞ்சோதி திருவிளையாடலாலும் அறிக.இதனால், `மேற்குறித்த சத்தி சிவங்களாவன இவை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage