
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
பதிகங்கள்

அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
English Meaning:
Satya-Jnana-Ananda is TranscendentalTranscending spheres of immortal Celestials,
Transcending Cosmic Spaces,
Transcending sphere of Nada,
He stood, all by Himself—the Lord;
Sakti with coral lips, pearly teeth and dewy-cool speech,
And the unflickering Light of Parajnana Following,
He stood (in Satya Jnana Ananda).
Tamil Meaning:
சிவன், `இறவா நிலை` எனப்படும் அபர முத்தி நிலையையும், அந்நிலைக்கு ஏற்புடைய சுத்தமாயா புவனங்களையும் கடந்து, அவ்விடத்தை அடைந்த தன் அடியார்களோடே கூடி, அவர்கட்கு ஒப்பற்ற தலைவனாய் இருப்பவன். (எனவே, `நிரதிசய சுத்த போகத்தையே தருபவன்` என்றதாம்.) ஆயினும் அவன், பவழம் போன்ற இதழையும், அதற்குள்ளே அரும்பும் முத்துப்போன்ற நகையினையும், அதற்குள்ளே மெல்ல மிழற்றுகின்ற இனிய சொல்லையும் உடைய மாதராளாகிய, கெடுதல் இல்லாத ஞான சொரூபியைத் துணையாகப் பற்றி நிற்கின்றான்.Special Remark:
`அதனால், பலவகைப்பட்ட மாயா போகங்களை வேண்டுவார்க்கு அவற்றையும் தருகின்றான்` என்பதாம். தமர் - அடியார். ``விண்வத்துக் கொட்டும் வண்ணத் தமரர்`` என்றாற்போல மகர ஈறொழிந்த ஏனையீறுகளின் முன்னும் சிறுபான்மை அத்துச் சாரியை வருதல் அறிக. `தமரிடத்து நின்ற` என ஏழாவதன் பொருள் பட விரிக்க. `அண்டம் கடந்து நிற்பவன், ஆயினும் தமரிடத்து நிற்பவன்` என்க. ``தனியைமன்`` என்றது, `சிவன்` என்னும் நிலையையும் , ``சோதி தொடர்ந்து நின்றான்`` என்றது, `சத்தன்` என்னும் நிலையும் குறித்தனவாம். இதனால், மெய்ப்பொருளின் இரு நிலைகள் விளங்கும். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.இதனால், `ஞான ஆனந்தமேயன்றி ஊன ஆனந்தமும் மெய்ப்பொருளால் ஆவதே` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage