
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
பதிகங்கள்

புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.
English Meaning:
The Cosmic Space of SamadhiIn the Outer Space is universe and the world,
In the Inner Space is Primal Jnana,
In the Space where Siva is, is Light Resplendent
In the Space that composes the Cosmos
Is Samadhi`s destination.
Tamil Meaning:
(`ஆகாசமாவது யாது` என்பார்க்கு, `ஆகாசமாவது ஏனை யெல்லாப் பொருள்கட்கும் இடம் தருவது` என்பது விடையாயின், பிற பொருளுக்கு இடம் தருவன யாவும் ஆகாசமாம். அந்நிலையில் பூதங்களில் ஒன்றை மட்டும் `ஆகாசம்` என்றல் இடுகுறியாம். அவ்வாறன்றிக்) காரண வகையால் நோக்கின் `புவனங்கள்` என்றும், `உலகங்கள்` என்றும் சொல்லப்படுவன புற ஆகாசங்களாம். எல்லாப் பொருள்களும் அறிவினுள் அகப்பட்டுத் தோன்றுதலால் நம் அறிவுகள் அக ஆகாசங்களாம். நமது அறிவுகளையும் அகப்படுத்தி நிற்பது சிவனது அறிவு ஆதலின் அஃது உள்ளுக்குள் ஆகாசமாம். அதனை அகப்படுத்தி நிற்பது வேறொன்றில்லை ஆகலின் அதுவே பரமாகாசமாம். அந்த ஆகாசத்தை இந்த உலகிலே பெறுதல் அழகிய `சமாதி` என்னும் நிலையாகும்.Special Remark:
`அதனைப் பெறவே முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம். புவனங்களாவன அவ்வவ் அண்டங்களைப் புரக்கும் கடவுளரது இடங்களாம். அவர்களது காப்பிற்கு உட்பட்ட அண்டங்களில் உலகங்கள் உள்ளன. ஆதி அறிவு - முதல் அறிவு. அது கருவிகளால் உண்டாகும் பாச அறிவாம். ``அறிவு`` என்பதை, ``சிவத்து`` என்பதற்கும் கூட்டுக. `அதற்கு மேலானது ஒன்று இல்லை` என்பதே ``செஞ்சுடர்ச் சோதி`` என்பதனால் குறிக்கப்பட்டது. இதற்கு `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றில் நின்ற ஆகாசம், அதனைப் பெறும் பேற்றினைக் குறித்தது. தான், அசை. அழகு, இங்கு நிரம்பிய இயல்பைக் குறித்தது. சமாதி, `யோக சமாதியும் ஞான சமாதியும்` என இருவகைத்து. ஞான சமாதியே ஞான நிட்டையாகும்.இதனால், ஆகாசப் பேறுகள் பலவற்றுள் முடிநிலையான ஆகாசப் பேறே பேறாதல் கூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage