
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
பதிகங்கள்

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.
English Meaning:
In Kundalini Yoga Jiva`s Thought Merges in SpaceAs you breathe in the Yogic Way,
You reach the Inner Light,
That is the breath of worlds all;
The Damsel in the Muladhara
Then rises and upward ascends,
Spreading Her day-light brilliance,
And thus uplifted,
My thoughts in space within merge
Tamil Meaning:
`சேதனம், அசேதனம்` என்னும் இருவகை உலகங்களும் இயங்குமாறு உளங்கொள்கின்ற உள்ளொளியாகிய சிவன் தன்னைச் செலுத்தியபோது, குயில்போலும் குரலையுடைய அருட்சத்தி அவனோடே குலாவி உலாவுதலால், எனது உள்ளம் அவனது ஒளியைப் பெற்று, இருள் நீங்கிப் பிரகாசிக்கின்றது.Special Remark:
உயிர்த்தல், உயிர்த்தன்மை பெற்று உணர்தல். எனவே, அதனைச்செய்வது சேதனமாயிற்று. ஆகவே, பின்னர் ``உலகம்`` என்றது அசேதனத்தையாயிற்று. பின் வந்த உயிர்த்தல், திருவுளங் கொள்ளுதல். `உயிர்க்கின்றவாற்றையும், உலகத்தையும் ஒக்க உயிர்க் கின்ற உள்ளொளி` என்க. சேர்தல். தன் காரியம் தோற்றி நின்றது. உலாவி - உலாவுதலால். `பரவெளியாவது அருட்சத்தியேயாதலின் உயிர் உடம்பொடு கூடியிருக்கும் பொழுதும் அஃது அந்தப் பரவெளியைச் சேர்தலாற்றான் ஒளியுடையதாய்த் திகழ்கின்றது` என்பது உணர்த்தியவாறு.இதனால், சீவன் முத்தியும் பர வெளியிருப்பேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage