
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
பதிகங்கள்

பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.
English Meaning:
How Siva is WithoutAs the Earth vast,
As the Universe vast,
As the Void Beyond,
—Thus is the Lord pervasiveness all;
Vast indeed is His benevolence,
His Feet support the world entire;
Yet invisible is His Form,
He the Primal Lord.
Tamil Meaning:
சிவன் (உடலில் உயிர்போல எப்பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பினால்) பெரிய பூமியாயும், அப்பூமிபோன்ற பல உலகங்களையும் அடக்கி நிற்கும் அண்டங்களாயும் இருப்பினும் அவை அனைத்தையும் கடந்த திண்ணிலமாகிய அருள் வெளியிலே விளங்குபவனாய்த்தான் இருக்கின்றான். அதனாற்றான் அவன் எல்லாவற்றையும் தாங்கும் பெரிய பூமிபோல. எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றலையும் ஒருவராலும் சென்று அணுகுதற்கரிய இடத்தையும் உடைய முதற்கடவுளாய் இருக்கின்றான்.Special Remark:
`ஆகையால், அவனை அவ்வருள்வெளியில் சென்று தலைப்படவே முயலவேண்டும்` என்பது குறிப்பெச்சம், ``கொள்கை`` என்றது உண்மையை. தாள் - ஆற்றல். ``அரு நிலமாய் நின்ற ஆதிப்பிரான்`` என்றது உடம்பொடு புணர்த்தல் ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. குருநிலம், அருநிலம் இரண்டும் ஆகுபெயராய், அதன்கண் உள்ளவனைக் குறித்தன. குரு - திண்மை; பேராற்றல்.இதனால், அருள் வெளியது சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage