
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
பதிகங்கள்

பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு)
உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.
English Meaning:
He as Light is Immanent in Brahma and VishnuIn the delight of the maiden`s union
Is the sparkling light of the Primal One;
Immanent in Brahma and Vishnu it was,
Yet they knew it not (and contending stood);
Then He revealed Himself to them
As Light Divine,
Flaming from earth to heaven.
Tamil Meaning:
உயிர்கட்குப் புறத்தே பெறப்படும் பயனாகிய மகளிரது இன்பத்தைப்போல, அகத்தே பெறப்படும் பயனாய் விளையும் இன்பமாய் நிற்பது, எல்லாவற்றிற்கும் முதலாயும், மேலாயும் உள்ள பேரொளிப் பொருள். அஃது அயன், மால் முதலியோர்க்கும் அறிய வாரா நிலைமையதாயும், மேலாய நெறியின் பயனாயும் பரவொளியின்கணுள்ள ஒரு பொருளாகும்.Special Remark:
ஈரிடத்தும், `பயனாய்` என ஆக்கம் விரிக்க. பின்னர் ``உள்ளே`` என்றமையால், முன்னர், `புறத்தே` என்பது பெறப்பட்டது. இன், உவம உருபு. ``உறும்`` என்பது முற்று. ஈற்றில் உள்ள ``அது`` என்பதை, ``சோதி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. நெறியின் பயனை, ``நெறி`` என்றார்.இதனால், ஆகாசப் பேறே பேரின்பப் பேறாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage