
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
பதிகங்கள்

பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர்
பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச்
செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.
English Meaning:
God`s Love For ManThe Lord loves Jivas as His children;
Well may they wallow in dirt and blemish;
He removes them and mends their ways;
Thus is God`s love for Man;
To each according to his deeds
In compassion He bestows His care.
Tamil Meaning:
தாம் பெற்ற புதல்வரிடத்தில் உள்ள தீ நாற்றத்தையும், அதற்குக் காரணமான அசுத்தப் பொருள்களையும் அனுபவித்த போதிலும் அப்புதல்வரிடத்தில், வெறுப்புக் கொள்ளாமலே பெற் றோர்கள் அவை நீங்குதற் பொருட்டுப் புதல்வர்க்கு வெறுப்பான செயல்கைளச் செய்வார். (அவை நெய்யிட்டு, நலங்கிட்டு முழுக் காட்டுதல், மருந்தூட்டுதல் முதலியனவாம்) அது போலவே, சிவனும் உயிர்கள் பக்குவம் எய்தற் பொருட்டு உலகப் பற்றை அவைகட்கு உண்டாக்குதலால், அப்பற்றின் வழியவான செயல் -களைச் செய்வான் ஆகவே, அது கருணை காரணமானது அன்றி, வன்கண்மை காரணமானது அன்றாம்.Special Remark:
குற்றம் - இங்கு, அசுத்தம். இதனைக் கூறவே ``நாற்றம்`` என்றது தீ நாற்றமாயிற்று. ``குணம் குறை`` என்றது `குணம் இல்லன்` என்றபடி. `குணம் இல்லன` என்று புதல்வரது கருத்து நோக்கி `பான்மை பக்குவம்` என்பதை முன் மந்திர உரையிலும் கூறினோம். பான்மைக்கு - பக்குவம் வருதற்கு, செற்றம் - பகை; வன்கண்மை `இலாது` என்பது ஈறு குறைந்து நின்றது. செய்கைக்கு - செய்கையால்; உருபு மயக்கம். ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றம் இலாது ஓர் பற்றைச் செய்கையால், அதற்கு எய்தின செய்யும்` என்க. உலகப் பற்றிற்கு எய்தன பிறப்பு இறப்புக்களும், இன்பத்துன்ப நுகர்ச்சிகளுமாம்.இதனால், `பக்குவம் வாயாத உயிர்கட்கு இறைவன் செய்வதும் அருளேயன்றி, வன்கண்மையன்று` என்பது கூறும் முகத்தால், அவ்வுயிர்களும் திருவடிப்பேற்றை அடைவனவே என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage