
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
பதிகங்கள்

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.
English Meaning:
Wait and Pray; Lord Will Come to YouThe Lord`s Holy Feet
In your thoughts hold;
His flower-like Feet
In wisdom adore;
The Lord who carries Sakti on His body
With Ganga muffled in his russet matted locks
Will in time your salvation grant;
Do wait and pray.
Tamil Meaning:
பதியாகிய சிவன் உங்கட்குக் காட்டாவிடினும் அன்பர்கட்குக் காட்டிய திருவடிகளை பதி வரலாறு உணர்ந்து அவைகளைப் பாவனையால் உங்கள் தலை மேல் வையுங்கள் மற்றும் மலர்போன்று அவைகளை உங்கள் உள்ளத்திலே வைத்துத் தியானிப்ப -துடன், வாயால் புகழ்ந்து பாடுங்கள். இவைகளையெல்லாம் இடை யறாது செய்யாவிடினும் இவற்றிற்குரிய காலங்களைத் தெரிந்து அக்காலங்களில் செய்யுங்கள்.Special Remark:
`செய்தா அவன் தனது திருவடிகளை உங்கட்கும்காட்டி உய்யக்கொள்வான்` என்பது குறிப்பெச்சம் ``தோற்றும்`` என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம் பின்னர் ``மதி`` என்றும் ``ஓதும்`` என்றும் கூறுதலால், முன்னர்வைத்த தலைமேலாயிற்று.``வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சுழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே``l
என்ற அப்பர் திருமொழியும் காண்க.
`இறைவனைத் தியானித்தற்குரிய சிறப்புக் காலங்கள் மூன்று` என்ப. அவை `காலை நண்பகல் மாலை` என்பன
``தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங்கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே``8
என ஓதியருளினமை காண்க. இவைகளை, `சந்தியாகாலம்` என்பர். சம் தியா காலம் - நன்றாகத் தியானித்தற்குரிய காலம்.
இனி வழிபாட்டிற்குரிய காலங்களை `முன் மூன்று, பின் மூன்று` என வைத்த ஆறு காலங்களும் சொல்லப்படும் `வைகறை, காலை, நண்பகல்` - என்பன முன் மூன்று காலங்கள், `எற்பாடு, மாலை, யாமம்` - என்பன பின்மூன்று காலங்கள். ``கதிசெயும்` என்பதில், செய்தல் - உண்டாக்குதல்.
இதனாலும் இறைவனது திருவடியை அடையும் முறையே வகுத்துச் சொல்லப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage