
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
பதிகங்கள்

ஆறிடு வேள்வி அருமறை சாலவர்
கூறிடு மந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறீடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.
English Meaning:
Even the Thought of Feeding Siva Jnanis is most EfficaciousWell may you feed a hundred hundred thousand Brahmins
That the holy thread wear and noble sacrifices perform;
But holier far is the desire to feed in endearment great
A morsel albeit, to
The Lord`s devotee true
Who the holy ashes wears.
Tamil Meaning:
ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும், வேதமாகிய நூலை ஓதுகின்றவரும், முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர்கள் கோடிபேர் உண்டு மகிழ் வதனால் உண்டாகின்ற பயனோடு திருநீற்றை யணிகின்ற சிவ னடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளைந்து நிலைக்கின்ற பயனை வைத்து எண்ணிப் பார்க்குமிடத்து, முன்னர்க் கூறிய பயன் பின்னர்க் கூறிய உணவில் ஒரு பிடியினால் விளையும் பயனளவேயாகும்.Special Remark:
`அருமறை கூறிடும் நூலவர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உண்பது`` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் பயனைக் குறித்தது. ``உண்பதில்`` என்றது உருபு மயக்கம்.இதனால், `தானங்களில் தலையாயதாய அன்னதானமும் அந்தணர்க்குச் செய்தலினும் மாகேசுரர்க்குச் செய்தலே கோடானு கோடி மடங்கு மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage