
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
பதிகங்கள்

தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.
English Meaning:
Feed Tapasvins, Feed All WorldsThe food, Tapasvins of blemishless thought took
Is food all three worlds took;
The offerings they cheerfully received
Are offerings the three worlds received;
—Thus He proclaimed, Nandi the Great.
Tamil Meaning:
`சிவனிடத்தினின்று பிறிதொன்றால் நீக்கப்படாத உள்ளத்தினையுடைய மாகேசுரர்கள் மனமகிழ்ந்து உண்ட பொருள் மூன்றுலகங்களும் உண்ட பொருளாகும்; (அவற்றிற்கு அது பயனாகும்` என்பதாம்) அதுபோலவே அவர்கள் பெற்றுக்கொண்ட பொருளும் மூன்றுலகங்களும் பெற்றுக்கொண்ட பொருளாம், என்று நந்தி பெருமான் எங்கட்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.Special Remark:
`சிவன் இலிங்க பூசையை ஏற்று மகிழ்தலினும் தன் அடியவர் பூசையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி எய்துவன் ஆதலின், அம்மகிழ்ச்சியால் அவனை உயிராக உடைய உலகம் அனைத்தும் மகிழ்வெய்தும்` என்றபடி. `அத்துணை மகிழ்ச்சிக்குக் காரணம் அவரது உணர்வின் சிறப்பு` என்பதை உணர்த்த, ``தண்டறு சிந்தைத் தபோதனர்`` என்றார். தண்டல் - நீக்குதல். ``எண்டிசை`` என்பதன் பின் `புகழும்` என ஒரு சொல் வருவிக்க. ``மகிழ்ந்து உண்டது`` என்றதனால், `அவர் மகிழும்படி வழிபடல் வேண்டும்` என்றதாயிற்று.இனைத்துணைத் தென்பதொன்றில்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -திருக்குறள், 97
என்னும் பொதுமறையை இது முதலாக வருகின்ற மந்திரங்களோடு ஒப்பிட்டுணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage