
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
பதிகங்கள்

தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.
English Meaning:
Tapas consumes KarmaThey who stand in tapas
Consume away all Karma
In Siva they stand;
Even Celestials know this not
They who know not Siva in tapas-standing,
Stood in tangle of births to endless sorrow condemned.
Tamil Meaning:
தவத்தில் நிற்கும் பக்குவிகளுக்கு நுகர்ச்சியாய் நிற்கின்ற கன்மங்கள் அனைத்தும் அவற்றை ஊட்டுவிக்கின்ற முதல்வ னுடையனவேயாய், அவர்க்கு நுகர்ச்சி யாகாயையைத் தேவரும் அறியாமாட்டார். அதனால், கன்மங்கள், எடுத்த பிறப்பில் நுகர்ச்சி யாதல், பக்குவம் இன்மையால் தவத்தில் நிற்குமாற்றை உணராதவர் கட்கேயாம்.Special Remark:
``தவம்`` என்றது இங்கு ``அவன் அருளாலல்லது ஒன்றும் செய்யாமை``3 ஆகிய இறை பணியை. இதன் கண் நின்றார்க்குப் பிராரத்தம் நுகர்ச்சி யாகாமையை,``நாமல்ல இந்திரியம்; நம்வழியின் அல்ல; வழி
நாமல்ல; நாமும் அரனுடைமை - யாம்என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்`` 3
என்பதனானும் அறிக. `தேவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. பவம் - பிறப்புய பாடு - நிகழ்ச்சி. நுகர்வு. கன்மங்கள் வகை யானும், விரியானும் பவவாயினும் தொகையான் ஒன்றே யாதல் பற்றி `அது` என ஒருமையாற் கூறினார். `அறியாதவர் எல்லாம்` என்பது பாடமன்று.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு வினை நீங்காமை கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் `கன்றலும் கருதலும்`` என்னும் பாடல் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், நாயனார் திருமொழி யன்றாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage