
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
பதிகங்கள்

அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.
English Meaning:
Sanmargi`s VisionThe bondage that keeps Jiva an alien to God,
The Karmas that flow from it,
The avastas that the Self experiences,
The Primordial Stuff that is Matter`s nucleus.
The Consciousness that entwines it,
The million, million mutations that pervade the universe,
They who see them all and their own Selves
Verily are they the Sanmargis true.
Tamil Meaning:
பூர்வபக்க மதங்களின் உணர்வுக்கு அப்பால் உள்ள பிரதி பந்தமாகிய ஆணவ மலத்தை, முன்னர் உணர்ந்து பின்னர் ஏனைய கன்மம், மூலப்பகுதி, அம்மதங்களால் உணரப்பட்ட சாக்கிரம் முதலிய அவத்தைகள், அவைகளில் தொடக்குண்டு நிற்கின்ற அறிவின் நிலைகள், பொருள்களிடையே உள்ள சிறியனவும், பெரியனவுமாகிய வேறுபாடுகள் என்பவற்றோடு தலைவனாகிய இறைவனையும் உணரும் சித்தாந்த ஞானம் வாய்க்கப் பெற்றவரே `சன்மார்க்கத்தோர்` எனப்படுவர்.Special Remark:
`சித்தாந்த ஞானம் கைவரப்பெற்றவர்க்கே பிற வெல்லாம் பூர்வ பக்கமாதல் இனிது விளங்கும்` என்றவாறு. ``முன்னும் அவத்தையும்`` என்பதனை, ``மூலப்பகுதியும்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. அதிபேதம் - பெரியவேற்றுமை. ``தன்`` என்றது ஒருவனான இறைவனை. இது, ``கண்டவர்`` என்பதனோடு இயைதல் கூடாமையின், கண்டவரை உணர்த்தாமை அறிக.இதனால், பிற ஞானங்கள் `சன்மார்க்கம்` எனப்படாது, சித்தாந்த ஞானமே `சன்மார்க்கம்` எனப்படுதல் பொருந்துமாறு கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage