
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
பதிகங்கள்

சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.
English Meaning:
Other Three Paths Open of ThemselvesUnto that rare seeker in Sanmarga path
The rest of three paths, of themselves open;
That alone is True Path union with Siva seeks;
Seek that Path
As Guiding Word scriptures proclaim.
Tamil Meaning:
சன்மார்க்கம் கைவரப்பெறும் தகுதியை அடைய விரும்பும் அரிய மாணாக்கர்க்கு, அதற்கு முன்னே ஏனை, யோகம் முதலிய மூன்றும் முற்ற வேண்டுதலே முறையாகுமாயின், வீடடையும் நெறியாவது, தன்னைச் சிவனுக்கு உரிய பொருளாக உரிமைப்படுத்து அறிதலேயாகின்றது, `இதுதான் ஆசிரியன்மார் தம் மாணாக்கர்க்கு அறிவுறுத்தத்தக்க நெறி` என்று உண்மை வேதம் தனது துணிவாகக் கொண்டு கூறுகின்றது.Special Remark:
அருமை, பக்குவ நிலை. ``என்றால்`` என்பது, `என்பதே முறை என்றால்` எனத் தெளிதற் பொருள் உணர்த்தி, ஏனைப் பசுபுண்ணியத்தளவில் அத்தகுதி வாராமை யுணர்த்திற்று. நன்மை - வீடு. அதனை அடையும் மார்க்கம். ``நன்மார்க்கம்`` எனப்பட்டது. `சிவனொடு படுத்து` என ஒரு சொல் வருவித்து, படுத்தல், நாடல் இரண்டற்கும் `தன்னை` என்னும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. இம்மந்திரம், `சிவ ஞானமாகிய சிறப்புணர்வின்றி, பிரம்ம ஞானமாகிய பொதுவுணர்வே வீடு பயக்கும் என்பதே வேதத்தின் முடிபு, என்பாரை மறுத்துக் கூறியது.இதனால், உண்மைச் சன்மார்க்கம் சிவஞானமேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage