
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
பதிகங்கள்

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.
English Meaning:
Greatness of SanmargisThe visage of Sanmargi is the Pedestal of Sakti
Where Sanmargi is there God is,
To see assemblage of Sanmargis is to vision Lord,
This I proclaim,
To whatsoever path you do incline.
Tamil Meaning:
எந்நிலையில் நிற்போர்க்கும் நோக்கும் திசை, இருக்கும் இருக்கை, உறையும் இடம், தியானிக்கப்படுகின்ற தெய்வம், இணங்கும் கூட்டம், வழிபடப்படும் குறி முதலிய எல்லாம் சன் மார்க்கத்தார்க்குப் போலவே குருவருளால் கொள்ளத் தக்கனவாம்.Special Remark:
`அங்ஙனம் கொண்டவழியே அவை சன்மார்க்கத்திற் குரிய மார்க்கமாய் தாமும் சன்மார்க்கமாம் தன்மையைப் பெறும்; இன்றேல் துன்மார்க்கமாய்விடும்` என்றவாறு. `சற்குருவே இங்குக் கூறிய திசை முதலியவற்றைச் சிவனையடையும் முறையில் உணர்த் துவர்; பிறர் அதுமாட்டாது பிறவற்றை உணர்த்துவர்` என்பதாம். ``சன்மார்க்கத் தார்க்கு`` என்றது, `சன்மார்க்த்தார்க்கு உள்ள` என்ற வாறு. ``சன்மார்க்கத் தார்க்கும்`` என்னும் உம்மை அசைநிலை. `எம் மார்க்கத்தார்க்கும் ஆம்` என ஒருசொல் வருவிக்க. ``இயம்புவன் கேண்மின்`` என்றது `என் சொல்லைக் கேளுங்கள்` என வலியுறுத்தவாறு.இதனால், சன்மார்க்கம் அல்லாதன நல்லன ஆகாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage