
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
பதிகங்கள்

சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.
English Meaning:
Initiation Rites in JnanaIn Jnana are initiation rites four;
Samaya initiates the search for the Self;
Visesha, the search for the Divine
Nirvana for the descent of Lord`s Grace;
Abhisheka for the attainment of Divine Guru`s Holy Feet.
Nandi Showed Sanmarga Path
The peerless Master Nandi
Of Saivam honoured high,
He showed us a holy path
For Souls` redemption true
It is Siva`s divine path, Sanmarga`s path
For all world to tread
And for ever be free.
Tamil Meaning:
எல்லாவற்றினும் மேலானதாகச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற சொரூப சிவத்தின் உண்மை இயல்பை விளக்குவனவாகிய வேத சிவாகமங்களில் ஞானப் பகுதியின் பொருளை உள்ளவாறு உணர்ந்து, அதனால் `வெகுளி, காமம், மயக்கம்` என்னும் முக்குற்றங் களும் நீங்கிச் சிவத்தோடு ஒன்று படும் நிலை சித்திக்கப் பெற்றுக் காலனை வென்றவரே குறிப்பொருளை (இலட்சியப் பொருளை) அறிந்து அடைந்தோராவர்.Special Remark:
`சன்மார்க்கமாம் சுடர்` என இயையும். இயல்பினை, ``தோற்றம்`` என வைத்து, காரணத்தைக் காரியமாகக் கூறினார். சிவா கமங்களும் சுருதியாதல் அறிக. `சுருதியில் கண்டு` என உருபு விரித்து முடிக்க. சுடர் - ஞானம்; அஃது அதனை உணர்த்தும் பகுதியைக் குறித்தது. ``சீற்றம்`` என்றது உபலக்கணம். கூற்றத்தை வெல்லுத லாவது, தூல உடம்பை விட்டு எமலோகம்போகாது, தூல, சூக்கும, பர உடம்புகளாகிய அனைத்தையும் விடுத்து இறைவனை அடைதல். `வெல்வார்` எனறப்பாலது, துணிபு பற்றி `வென்றார்` எனப்பட்டது.இதனால், சரியை முதலிய நான்கனுள் முடிவாகச் சொல்லப் படுகின்ற உண்மை ஞானம், பிறவியாகிய பெருந்துன்பத்தை நீக்கிச் சிவானந்தமாகிய எல்லையில் இன்பத்தைத் தருதலால், `சன்மார்க்கம் - நன்னெறி` எனப்படுவதாயிற்று என்பது கூறப்பட்டது. `இதனின் மிக்க நன்னெறி பிறிதில்லை` என்பதாம்.
[இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``சைவப்பெருமை`` என்னும் மந்திரம் இத்தந்திரத்தின் இறுதி யதிகாரத்தில் வருவது.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage