
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
பதிகங்கள்

தானவவ னாகித்தான் ஐந்தாம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தானவ னாய்உற லானசன் மார்க்கமே.
English Meaning:
Sanmarga Leads to Supreme Grace-BlissWhen you scorch Impurities five
And listen to the Voice of Silence
You become a pure Mukta;
And I and You in one merge;
And by the unsullied Grace Jnana grants
You shall joy of the Bliss Divine;
Verily, then by Sanmarga Path
You become He indeed.
Tamil Meaning:
சீவன் சிவனேயாய் நிற்கும் முறையால் அஃது ஐந்து மலங்களை அழித்து, மௌனோபதேசத்தின் வழி முத்தி நிலையைப் பெறுதலும், பின் குறையில்லாத ஞானத்தால் உண்டாகும் அனுபவத் தில் விளைகின்ற இன்பமும் ஆகிய இவையே சீவன் சிவனேயாய் விடுகின்ற சன்மார்க்கமாகும்.Special Remark:
``தான் அவனாதல்`` இரண்டனுள் முன்னது அவ்வாறு உணர்தலாகிய சாதனையையும், பின்னது, அங்ஙனமேயாதலாகிய பயனையும் குறித்தன. ஐந்து மலங்களாவன. `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம்` என்பன. ``மலங்கள் ஐந்தாற் சுழல் வேன் தயிரிற் பொரு மத்துறவே`` 1 என மணிவாசகரும் அருளிச் செய்தார். மௌனோபதேசம், சின்முத்திரையால் உணர்த்தல். இனி, `மௌன நிலையைத்தரும் மொழி` என்றும் ஆம்.இதனால், ஞானமே சன்மார்க்க மாதல், ஏதுக்காட்டி விளக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage