
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
பதிகங்கள்

ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.
English Meaning:
Attainments at Four Jnana StagesThe Jnani attains all the four stages in Jnana;
Jnana-in-Jnana is to transcend the ``I`` and ``Mine``
Yoga-in-Jnana is to envision in the Light of Nadanta;
Kriya-in-Jnana is to seek the liberation by good.
Tamil Meaning:
ஞானத்தில் ஞானத்தை அடைந்தவனுக்கு, அந்த ஞானத்திற்குக் கீழுள்ள மூன்றும் முன்பே கைவந்தனவாம். ஞானத்தில் ஞானமாவது `யான், எனது` என்னும் ஞாதுரு ஞானங்கள் தோன்றாது, ஞேயம் ஒன்றேயாக அதனுள் அழுந்துதல். ஞானத்தில் யோகமாவது தத்துவாதீதத்தில் எல்லையற்ற சிவ ஒளியில் சேர்தல். ஞானத்தில் கிரியையாவது தத்துவக் கூட்டத்தினின்றும் விடுபடுமாற்றைச் சிந்தித்தல்.Special Remark:
சிந்தித்தல் கூறியதனானே, தான் தத்துவங்களின் வேறாதலைக் கேள்வியுறுதல் ஞானத்தில் சரியை என்பது அறியப் படும். ``ஞானி`` என்றது இவ்வாறே பொருள்படுதல் அறிந்துகொள்க.இதனால், `மேற் குறித்த நான்கு படிகள் இவை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage