
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
பதிகங்கள்

அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.
English Meaning:
Jnana is Life-BoatThe Lord is of Infinite Grace,
In His Celestial City are Love, Light and Peace eternal,
To them that seek to know His Form
And understand His Attributes
And attain His Holy Feet
To them, this is the Path
This, this the boat to cross Life`s turbulent waters
Tamil Meaning:
தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாதலை உணரும் உணர்வும், அவ்வுணர்வால் அதற்குட்டானே அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி, அதனைமறவாதுஉணர்கின்ற உணர்வால் பெருகுகின்ற அன்பும் என்னும் இவை ஒரு சேரக் கூடி நீங்கா திருக்கின்ற அந்த உள்ளமாகிய கோயிலிலே நீங்காதிருக்கின்ற பேரரு ளாளனாகிய சிவனது அருட்டிரு மேனி, அருட்குணம், ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடி இவைகளை மறவாதிருக்கின்ற முறையை உணர்ந்த ஞானிகட்கு இவ்வுலகமாகிய இருள் நீங்கி, ஞானமாகிய ஒளி பிரகாசிக்கும்.Special Remark:
`குரை கழலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஈற்றடியில் `இது நீர்த்தொனி யாமே, நீர்த் தோணி யாமே` என்பன பாடம் அல்ல. ` `அறிவும் ... ... ... ... பிறியா நகர்``,இதனால், அருளது உபகாரத்தை உணர்தல் முதலிய மூன்றும் ஞானமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage