
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
பதிகங்கள்

ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
English Meaning:
Jnani Becomes Light DivineIn whose thoughts Jnana ripens and swells,
In his path the Life-Boat appears and greets him;
And thus does he reach the surging waters
Of the Crescent Moon`s sphere,
And there rid of Impurities,
He himself the Effulgent Light becomes.
Tamil Meaning:
ஞானத்தை விரும்பி எழுச்சி பெற்ற உள்ளத்தில், பிராணவாயுவாகிய ஊர்தியை விரும்பி ஏறி மேலே செல்லும்பொழுது வழியில் எதிர்ப்படுகின்ற இடந்தோறும், சந்திர மண்டலத்திலிருந்து பெருகும் அமுத தாரை நிரம்பியிருக்கக் கண்டு, அதனால் உடற்கும், உள்ளத்திற்கும் வருவனவாகிய குறைகளைப்போக்கி நிலைபெற்று ஒளிமயமாக ஆகுங்கள்.Special Remark:
இரண்டாம் அடியில் `ஏனம்` என்பது பாடம் அன்று. உடற்கு வரும் குறைகள், `நரை, திரை, மூப்பு, சாக்காடு` என்பன. உள்ளத்திற்கு வரும் குறை, ஒருவழி நில்லாமை. இவை யோகத்தால் நீங்குதல் அறிக. ஒளி, உடற்பொலிவும், ஞானமும் என்க.இதனால், ஞானவேட்கை யுடையோர் யோகத்தால் உள்ளமும் உடலும் நிலையுடையதாகப் பெறின், இப்பிறப்பிலே அதனைத் தப்பாது அடைதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage