
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
பதிகங்கள்

தன்பால் உலகம் தனக்கரு காவதும்
அன்பால் எனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.
English Meaning:
Stages of Attainment Through JnanaThus they say:
By devotion the Jiva first sojourns Lord`s world;
Then comes to dwell in Lord`s proximity;
Further on receives Lord`s grace,
And in the end attains Jnana
In Sivohamic I and You union
Jiva shall himself Siva become.
Tamil Meaning:
சிவனது வியாபகத்தில் உள்ள உலகம் சிவனது உடைமையும், அடிமையுமாய் அவனுக்கு உரித்தாதலை உணர் தலையே `ஞானம்` என்றும், சிவனிடத்து வைத்த அன்பு காரணமாக அவனது திருவருள் தமக்குக் கிடைக்கப் பெறுதலையே `சிவோகம் பாவனை` என்றும் ஞானிகள் கூறுவார்கள். அவ் இரண்டையும் பெற்றோர், அவற்றின் பயனாகப் பின்பு, அறியத்தக்க பொருளையே அறிந்து, அதில் அழுந்துவார்கள்.Special Remark:
`ஆவதும், ஆவதும் - ஞானமும், சிவோகமும்` என்றது நிரல்நிறை. ``என்பார்கள்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. ``தன்`` என்றது சிவனாதல் விளங்குதற்கே, பின்னர், ``எனக்கு`` எனத் தம்மேல் வைத்துக் கூறினார். ``பெற்றிடும்`` என்பதற்கு, `அந்நிலையை எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. சடமும், சித்துமாகிய இருவகை உலகத்துள் சடம் சிவனது உடைமையும், சித்து சிவனது அடிமையும் ஆம் என்க.இதனால், தத்துவ ஆராய்ச்சியால், `யான்` எனத் தன்னையே முதல்வனாக மதிக்கும் அகமயக்கமும், பலவற்றையும் தனித்தனி `எனது` எனப் பற்றும் புற மயக்கமும் நீங்கி. எல்லாம் சிவனது அடிமை யும், உடைமையுமாகின்ற உண்மையை உணர்தலே ஞானமாதல் கூறப்பட்டது. இதனையே, `தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்`` 1 என்றார் மெய்கண்ட தேவநாயனார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage