
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
பதிகங்கள்

நமஅது ஆசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவ தன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.
English Meaning:
Be Rid of Na and MaJiva has ``Na`` and ``Ma`` for its seats
Siva has ``Si`` and ``Va`` that lead you to Him
Be rid of ``Na`` and ``Ma``
And seek Primal One;
He will be yours at once;
The State of Mauna leads to Siva Becoming
That to reach is Liberation True.
Tamil Meaning:
`நம` என்பதை அடிநிலையாகக் கொண்டு பசுவாய் நிற்கின்ற உயிரே. `சிவ` என்பதனை அடிநிலையாகக் கொள்ளும் நிலை கிடைக்கப்பெறுமாயின், சிவத்தோடு ஒன்றிப் பதியாய்விடும். ஆதலால், நகார மகாரங்களால் குறிக்கப் பெறுகின்ற திரோதாயியும், மலமும் அறுவதற்கு வழி அவற்றை முதலாகக் கொண்டு ஓதுவதன்று; மற்று, சிகார வகாரங்களை முதலாகக் கொண்டு ஓதுதலேயாகும். அவ்வாறு செபித்தல் பரமுத்திக்கு வாயிலாம்.Special Remark:
`பசுவே சிவமாய்ப் பதியாம்` என்க. `சித்தி` என்னும் முதனிலையே `சித்திக்க` என வினையெச்சப் பொருள் தந்தது. `ஆதி யாவது` என ஆக்கம் வருவித்து, அதனை, `சிவம் ஆதி ஆவதாகும்` என ஈற்றிலும் கூட்டுக. மோனம் சேர்தல் - செபித்தல். இவ்வாறே,``நம்முதலா ஓதில் அருள் நாடாது; நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று`` (வெண்பா - 14)
என்னும் உண்மை விளக்கம் முதலிய சித்தாந்த நூன்மொழிகளையும் இங்கு நோக்குக. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், நிட்காமிய வழிபாட்டில் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage