
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
பதிகங்கள்

சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.
English Meaning:
Fragrant Ingredients for WorshipThe ten unguents to form,
Musk, sandal paste, perfumed kumkum,
Camphor, eagle wood fragrant and the rest
Mix in water or rose water and make a paste
Then put it on (Chakra) and worship.
Tamil Meaning:
சந்தனத் தேய்வையைக் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம், அகிற் சாந்து இவை சேர்த்துப் பனிநீராற் குழம்பாக்கிச் சாத்தி நீரால் ஆட்டி அன்போடு வழிபடுங்கள்.Special Remark:
சாங்கமதாக - திருமேனியில் படத்தக்கதாக. சாந்து - தேய்வை. தேம் கமழ் - இனிதாக மணக்கின்ற. பாங்கு - நன்மை. `பாங்காகப் பட` (பொருந்த) என்க ``வைத்து`` என்றார், `முன்னே ஆட்ட வேண்டிய பொருள்களை ஆட்டியபின்` என்றற்கு. `அர்ச்சித்தல்` என்னும் பொதுச் சொல், இங்கு, ஆட்டுதல்மேல் நின்றது, இனி, ``நீர்`` என்பதை முன்னிலைப் பெயராக்கி உரைத்தலும் ஆம்.இதனால், சிறப்புடைய ஒன்றை எடுத்துக் கூறும் முகத்தால் அபிடேகம் விதிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage