
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
பதிகங்கள்

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே.
English Meaning:
The Primal Lord blesses allDenizens of earth below and heaven above;
From the black chamber of the Soul
He dispels darkness;
And within radiates the pure rays of His dazzling light.
Tamil Meaning:
ஆதிப் பிரானகிய சிவபெருமான், பரிபாகம் பெற்ற உயிர்கட்கும், பரிபாகத்தால் ஞானத்தை எய்தினோர்க்கும் தனது திருவருள் நன்கு புலப்படும் வகையில் விளக்கத்தைத் தருவான். ஏனையோர்க்குப் பகலவனும், நிலாவும் பகலிலும், இரவிலும் இருள் நீங்க எரிப்பினும் இருள் பொதிந்து நிற்கும் அறைபோல நின்று மறைத்தலையே செய்வன்.Special Remark:
`ஓளியுடையோர்` என்னும் பொருட்டாகிய `தேவர்` என்னும் பெயர், இங்கு இடுகுறியாகாது காரணமாய் நின்று, `ஞானிகள்` எனப் பொருள் தந்தது. இறைவன், பரிபாகிகட்கு அறிவா யும் ஞானிகட்கு இன்பமாயும் விளங்குவன். இவை இரண்டுமே, `அருளல்` எனப்படும் என்க. முன்னர், ``தெருளும் உலகிற்கும் தேவர்க்கும்`` என்றதனால், பின்னர், `ஏனையோர்க்கு` என்பது போந்தது. ``செய்யும்`` என்றது முற்று. சுருளும் சுடர் - எதிர்ப்பட்ட பொருள்கள் வெதும்பி மடிதற்கு ஏதுவாகிய ஒளி; ஞாயிறு. `நின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தல். `நிற்ப` என்பது ``நின்று`` எனத் திரிந்துநின்றது. ``இருட்டறை``, இறந்த கால வினைத்தொகை. இருளுதலை, `இருட்டுதல்` எனவும் வழங்குப. ``ஆம்``என்றது, ``போல்வான்`` என உவமமாய் நின்றது.இதனால், மறைத்தல் பரிபாகம் இல்லாதார்மேலதாயே நிகழ்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage