
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
பதிகங்கள்

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கை செயலணை யாரே.
English Meaning:
The Lord is the light of our eyesHe loves us
He is the Primal One
—Male, Female and Neuter is He;
Tongues praising and hearts melting,
They seek not the path
That leads to the Celestial Lake.
Tamil Meaning:
சிவபெருமானைப் பொருள்களைக் காண்கின்ற கண்ணினது ஒளியைக் காதலிப்பதுபோலக் காதலித்து, சுவையற்ற நாவினை உடைய மனத்தால் நினைந்து, நெடுங்காலமாக வருகின்ற பிறப்பு இறப்புக்களை விட்டொழிதற்கு ஏதுவான தவத்தில் தலைப்படுகின்றிலர் உலகர்.Special Remark:
`அது சிவபெருமானது மறைத்தல் தொழிலால், நிகழ்வதே` என்பது குறிப்பெச்சம். `சுவையை வெறுத்த உணர்வுடை நெஞ்சம்` என்பதனை ``ஊண்படு நாவுடை நெஞ்சம்`` என்று ஓதினார். முன்பு உண்ட அறுசுவையைப் பின்னும் நாடி நிற்பது மனமாகலின், அதனை எடுத்துக் கூறினார். ``நெஞ்சம் உணர்ந்து`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `பொய் + கை` எனப் பிரித்து நிலையைாமை உவர்த்துவிடுகின்ற எனப் பொருள் கூறுக. கை செயல் - கைத்து விடுதற்கு ஏதுவான செயல். `கண்ணொளியைப்போல` என விரிக்க.இதனால், மறைத்தல் தொழிலால் இறைவன் உயிர்கள் தன்னை அறியாவாறு மறைத்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage