
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
பதிகங்கள்

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே.
English Meaning:
He is the One within; He is the Light within;He moves not a wee bit from within
He and your heart are thus together,
But the heart His Form knows not.
Tamil Meaning:
சிவன், ஆன்ம அறிவேயாயும், அவ்வறிவுக்கு அறிவாயும், அதனில் சிறிதும் பிரிவின்றியும் அதனோடு யாண்டும் உடனாயே நிற்பினும் அவ்வறிவு மல மறைப்பால் அவனது இருப்பை அறியமாட்டது.Special Remark:
`அம்மறைப்பு நீங்குதற் பொருட்டே திரோபவம் (மறைத்தல்) செய்யப்படுகின்றது` என்பது குறிப்பெச்சம். `மலமறைப் பால்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. ``உள்ளம்`` என்றது ஆன்ம அறிவை. ``ஓரடி`` என்றது இடச்சிறுமை குறித்தது. இதனானே, காலச் சிறுமையும் கொள்ளப்பட்டது. உண்மை அளவாகப் பொதுப்பட உணரப்படுவதனை ``உரு`` என்றார். மறைத்தலைச் செய்வதாகிய மலத்தின் வழி நின்று அதனைச் செய்வித்தலால், அம்மலத்தின் ஆற்றல் தேய்ந்தொழியும் என்க. மாயை கன்மங்களால் பிறவியில் ஆழ்த்துதலே, `மறைத்தல்` எனச் சிறப்பாகக் குறிக்கப்படும். இதுவும் ஆணவத்தைத் தேய்த்தற் பொருட்டேயாம். மறைத்தலைச் செய் வதையே, `இறைவன் பந்தத்தையும் தருபவன்` என்பர்.இதனால் திரோபவத்திற்குக் காரணம் கூறப்பட்டது.
இத்திருமந்திரத்துள் நாயனார் ஆன்ம அறிவை `உள்ளம்` என்னும் சொல்லாற் குறித்தருளினார். இவ்வாறே மெய்கண்ட தேவரும் குறித்தார். இவைகளால், திருவள்ளுவர், ``ஓர்த்துள்ளம் உள்ள துணரின்`` என்றதில் `உள்ளம்` என்றதும் ஆன்மாவையே யாதல் விளங்கும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage