
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
பதிகங்கள்

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.
English Meaning:
The Lord of blemishless glory, from death and birth immune,Permits none to enjoy bliss, unearned by worthy deed;
Giving and gifting – of these always think;
Deny and cause pain;
You stand condemned as animals.
Tamil Meaning:
அறிவுடையீர், சிலவிடத்துச் சிலராகவும் சில விடத்துப் பலராகவும் வாழ்வாரது பெருவாழ்வாகிய செல்வத்தைக் கண்டு, அதனானே அவர் ஈவர் என்று கருதி அற்பராயிருப்பாரைப் புகழ்ந்து, பயன் கிடையாமையால் பின் மெலிவடைதலைச் செய்யாமல், நுமக்குப் புக்கிலாம் வீடு கருதி இறைவனைத் துதியுங்கள். அதுவே வில் வல்லோன் எய்த அம்புக் குறிபோலத் தப்பாது பயன் தருவதாகும்.Special Remark:
`செல்வங் கருதி` என்பதனை, ``வாழ்வெனும்`` என்பதற்குப் பின்னர்க் கூட்டியுரைக்க. `செல்வத்துப் பயன் ஈதலே` என்பதை அறியாது, ஈட்டலும், நுகர்தலுமே எனக் கருதுவாரை, ``புல்லறிவாளர்`` என்றார். `சிலரும் பலரும் ஆகியோரது வாழ்வு` என்க. `உயிர்க்கு உடம்பு துச்சில்` எனவும், `வீடுபேறே புக்கில்` எனவும் திருவள்ளுவர் (குறள், 340) கூறுமாறு காண்க. இலக்கு - இலக்காய பொருள். ``விற்குறி`` என்பதில், வில் ஆகுபெயர்.இரத்தலும் ஈதலே போலும், கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. -குறள், 1054
என்பராகலின், கரப்பார் மாட்டுச் சென்று இரத்தலே வறியார்க்கு இரப்பு என்னும் இழிதொழிலாதல் பெறப்பட்டது.
இதனானே,
இரப்பன் இரப்பாரை யெல்லாம், இரப்பிற்
கரப்பார் இரவன்மி னென்று. -குறள், 1067
எனவும் கூறுப.
அதனால், `கரப்பார்பால் சென்று இரவாமையே வறியார்க்கு ஓர் அறம்` என்பார் ``புல்லறிவாளரைப் போற்றிப் புலராமல்`` என்றும், `பொருளிலார்க்கு ஈதலாகிய அறம் கூடா தாயினும், இறைவனை ஏத்துதலைவிட வேண்டாவன்றோ` என்பார், ``இறைவனை ஏத்துமின்`` என்றும் கூறினார்.
இதனால், வறியார்க்கு ஆகும் அறம் கூறப்பட்டது. ``தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்`` (தி.7 ப.34 பா.1) என்னும் சுந்தரர் திருப் பதிகம் இத்திருமந்திரத்தொடு வைத்து நோக்கற்பாற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage