
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
பதிகங்கள்

பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.
English Meaning:
The Lord adored by all the world, yet they praise not,To the needy poor, even the smallest bit they deny,
Nor`ll they tend the grove e`en with one potful of water;
Will they for ever stand in Hell? they whose end is nigh.
Tamil Meaning:
வாழ்நாள் வாளா குறையப்பெற்ற மக்களே, நீவிர் யாவராலும் போற்றப்படுகின்ற சிவபெருமானைத் துதிக்கவும் இல்லை; இரப்பார்க்கு ஈதலும் இல்லை; குடத்தால் நீர்முகந்து ஊற்றிச் சோலைகளை வளர்க்கவும் இல்லை; ஆகவே, இறந்தபின் நரகத்தில் நீங்காதிருக்கப் போகின்றீர்களோ?Special Remark:
இவற்றுள் ஒன்றே செய்யினும் அறமாம் என்னும் கருத்தால் இவ்வாறு கூறினார். ``ஈதலும் ஈயார்`` என்பது, ``உண்ணலும் உண்ணேன்`` (கலி - பாலை 22) என்பதுபோல நின்றது. `தானே மரங்களை வைத்தா யினும், முன்பு உள்ள மரங்கட்கு நீருற்றியாயினும் வளர்த்தலே அறம்` என்றற்கு, `கரகத்தால் நீரட்டி` என்றார்.இக்காலத்தார் இவற்றைச் செய்யாதொழியினும் வளர்ந்துள்ள மரங்களை வெட்டா மலேனும் இருப்பார்களா என்பது தெரியவில்லை.
``நரகத்தில் நிற்றிரோ`` என்றது ``கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` என்னும் (தி.4) அப்பர் திருமொழியை நன்கு வலியுறுத்துவதாகும். `ஏத்தார்` என்பனபோலப் படர்க்கையாக ஓதுவன பாடம் அல்ல.
இதனால், அறம் செய்யாதார் நரகினை எய்துதல் கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage