
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
பதிகங்கள்

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.
English Meaning:
Of yourself knowing little, caring naught for your good,Unmindful e`en of poverty of tender youth taking no care,
Before Death`s stern, relentless summons arrives,
Let noble charities your redeeming goodness declare
Tamil Meaning:
கூற்றுவன், தன்னைப் பிறர் காணாதபடியும், தன்னால் பற்றப்படுவர் நற்பண்பினை உடையர் என்றோ, தம்மை யன்றித் தம் சுற்றத்தார்க்குக் களைகணாவாரை இலர் என்றோ முதியர் என்றோ, இளையர் என்றோ எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவன். அவ்வாறு வருமுன்னே நீவிர் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.Special Remark:
`முதியர் என்று ஓராது` என்பது இசையெச்சம். தன்மம் செய்தல் கூறுவார், தவம் செய்தலையும் உடன் கூறினார், அதுவும் அறத்தின் வகையாதல் பற்றி. `தவமும்` என்னும் உம்மை தொகுத்தல்.இவை இரண்டு திருமந்திரங்களானும், `யாக்கை முதலியவை நிலைத்துள்ளபொழுதே அறத்தைச் செய்துகொள்க` என்பது கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage