
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
பதிகங்கள்

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
English Meaning:
Easy for all to offer in worship a green leaf to the Lord,Easy for all to give a mouthful to the cow,
Easy for all to give a handful of food to others before sitting down to eat,
Easy for all, good, kind words on others to bestow.
Tamil Meaning:
உண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.Special Remark:
`அதனால், யாம் பொருள் இலம் என்று அறஞ் செய்யாமைக்குக் காரணங் கூறியொழிதல் பொருந்துவதன்று` என்பது குறிப்பெச்சம். ஆம் - கூடும். ``பச்சிலை`` முதலிய நான்கன் பின்னும் முறையே, `சூட்டல், கொடுத்தல், இடுதல், சொல்லல்` என்பன சொல் லெச்சமாய் நின்றன.இதனால், மக்கள் யாவரும் `அறத்தினைத் தத்தமக்கு ஒல்லும் வகையான் ஓவாதே செல்லும்வாயெல்லாம் செயல் வேண்டும்` (குறள் - 33) என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage