
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
பதிகங்கள்

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.
English Meaning:
Driving away ignorance, if with Wisdom you fill not your mindIn days of plenty, you will not give in charity. What avails it, though wide awake, if hell-fire spreads around,
What avails it, then, if impoverished of heart you are?
Tamil Meaning:
அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?Special Remark:
`தருக்கிய` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `திரியாது ஓதுதலே பாடம்` எனினுமாம். `கூற்றுவன்` என்பது வருகின்ற திருமந்திரத்தினின்றும் கொள்ள வைத்தார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage