
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
பதிகங்கள்

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
English Meaning:
Worldly Desires are Never-EndingOur desires grow, but none the truth to find;
There`s one stake to hold but nine exits to leave;
The old familiar faces come smiling to greet and bow;
Deceivers ever, they abandon us without a reprieve.
Tamil Meaning:
உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப் பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசை மிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.Special Remark:
``வேட்கை மிகுத்தது`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிலும்,`` மெய்கொள்வார் இங்கிலை`` என்பதை இறுதிக் கண்ணும் கூட்டி உரைக்க. ``மிகுத்தது`` என்பதன் பின் `ஆயினும்` என்பதும், ``கைவிட்டவாறே`` என்பதன்பின் `உளதாம்` என்பதும் எஞ்சிநின்றன. ``தறி`` என்றது உடம்பையும், ``வழி ஒன்பது`` என்றது அதில் உள்ள ஒன்பது பெரும்புழைகளையுமாம். பூட்டுதலுக்குச் செயப் படு பொருள் வருவிக்கப்பட்டது.இதனால், `தந்நலம் கருதாத சுற்றத்தாராயினும் துணையாக மாட்டுவரல்லர்` என்பதுணர்த்தி, மேலது வலி யுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage