
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
பதிகங்கள்

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.
English Meaning:
Wealth is a Flood that Ebbs and FlowsWeigh well the pros and cons, and having weighed, waver not.
Lose not your bearings, caught in wealth`s eddy;
Fling aside the transient trappings of earthly treasures
And thus when the Pale Sergeant comes, for the great leap be ready.
Tamil Meaning:
அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.Special Remark:
``தெற்ற`` என்பது நீட்டலாயிற்று. தெற்றத் தெளிதல், நன்கு தெளிதல். `கலக்கி மலக்கல்` என்பதொரு வழக்கு என்பது, ``கலக்கி மலக்கிட்டுக்கவர்ந்துதின்ன`` (தி.4 ப.1 பா.8) என்பதனால் அறிக. பெரிதும் கடிந்துரைத்தல் தோன்றச் ``செல்வத்தை`` என்றாராயினும், `செல்வப் பற்றினை` என்றலே, கருத்து என்க. ``ஆமே`` என்ற ஏகாரம் எதிர்மறை உணர்த்திற்று. அதனை ஈற்றசையாக்கிக், `களைந்தால் குதித்தல் கூடும்` என உரைப்பாரும் உளர். இதனால், `செல்வம் பயன் தருவதாயினும், பெரும்பயன் தருதல் இல்லை` என்பது கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage