
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
பதிகங்கள்

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே.
English Meaning:
TRANSITORINESS OF WEALTHKingly regalia, domains riches are impermanent
Before others seize and away your riches take,
Your elephant and car, your kingship and grace,
Even while life pulses, if you the Lord`s asylum seek,
You need not do any other austerities.
Tamil Meaning:
குடிகளிடத்து இரக்கங்கொள்ளும் நல்ல அரச னாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இல னாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலமருவன், அவன் செய்த அறம் தன் வாழ்நாள் முழுதும் அரசனேயாய் வாழ்தற்கு ஏற்ற பேரறம் என்பது ஒரு தலையன்றாகலின்.Special Remark:
``அருளும்`` என்றது, பெயரெச்சம். ``அரசனும்`` என்ற உம்மை உயர்வு சிறப்பு. ``ஆனையும், தேரும்`` என்றது உபலக்கணம். ``பிறர்`` என்றது பகைவரை. ``தெருளும், மருளும்`` என்னும் செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலில் வந்தன. தெருளலும், மருளலும் அலமரல் இன்மையையும், அதனை உடைமையையும் குறித்து நின்றன. `சேரின் தெருளும்` எனவும், `பினை மருளும்` எனவும் மாற்றிப் பொருள் கொள்க. ``பின்னை`` என்றது வினைமாற்றின்கண் வந்த `மற்று` என்னும் பொருட்டாய் நின்றது. `ஆதலின்` என்பது சொல்லெச்சம். `அவன் மாதவமன்றே` என்பது பாடம் ஆகாமை அறிக. இதனுள், `சிற்றம் பலமேய செல்வன் கழல் ஏத்தும் செல்வமே நிலையுடைய செல்வம்; (தி.1 ப.80 பா.5) பிற செல்வங்கள் அன்ன வல்ல` என்றற்கு நாயனார் சிவபெருமானை இங்கு, ``செல்வன்`` எனக் குறித்தமை அறியத்தக்கது.யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
என்றார் நாலடி நானூற்றினும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage