
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
பதிகங்கள்

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
English Meaning:
Import of AgamasNumberless the Sivagamas composed,
The Lord by His Grace revealed;
Yet if they know not the wisdom He taught;
Like writing on water, the unnumbered fade.
Tamil Meaning:
சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறியமாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்.Special Remark:
என்றது, வருகின்ற திருமந்திரங்கட்குத் தோற்றுவாயாக லின், `அதனால் அவற்றின் பொருளை அறிதற் பொருட்டுப் பல மொழிகளை அவன் படைத்தனன்` என்பது குறிப்பெச்சமாக உரைக்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage